Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உரத்தை அத்தியாவசிய பொருளாக அறிவிக்க நடவடிக்கை!

In இலங்கை
Updated: 16:03 GMT, May 21, 2018 | Published: 16:01 GMT, May 21, 2018 |
0 Comments
1067
This post was written by : Vithushagan

உரத்தை அத்தியாவசிய பொருளாக குறிப்பிட்டு அதனை வர்த்தமானியின் மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. வர்த்தகர்களினால் விவசாயிகளுக்கு கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் முகமாக விவசாய அமைச்சு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் இந்த வாரத்தில் வர்த்தமானியின் மூலம் பிரகடனப்படுத்தப்படும் என்று விவசாய அமைச்சர்  மஹிந்த அமரவீர  தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நெல் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 50 கிலோ உர மூடையொன்றை 500 ரூபா வீதம் வழங்கப்படுகின்றது. ஏனைய பயிர் உற்பத்திக்கான உர மூடை 1500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.இருப்பினும் சில வர்த்தகர்கள் கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

சில வர்த்தகர்கள் ஒரு கிலோ உரத்தை பல்வேறு விலைகளுக்கு விற்பனை செய்வதாகவும் மேலும் சிலர் பல உர வகைகளை கலந்து கலவை செய்யப்பட்ட உரமாக கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான வர்த்தகர்களை முற்றிகையிடுவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் இதன்போது கூறினார்.

நெல் உற்பத்தி இடம்பெற்றுள்ள பிரதேசங்களில் மழை பெய்வதினால் சிறுபோக நெல் உற்பத்தி பாரியளவில் இடம்பெற வாய்ப்புண்டு.இதனால் அனைத்து விவசாயிகளுக்கும் உரத்தை வழங்குவதற்காக தொடர்ச்சியான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான உரத்தை அரசாங்கத்தின் லக்போஹற மற்றும் கொமர்ஷல் நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதுடன் ஏனைய பயிர்களுக்கான உரம் தனியார் நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றது.

இந்த உரம் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.இதன் காரணமாக லக்போஹற மற்றும் கொமர்ஷல் உர நிறுவனங்களுக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் இதன்போது கூறினார்.

கூடுதலான விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான விற்பனை அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் என்று உர நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தர்.

இந்த நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் பி.விஜயரத்ன உள்ளிட்ட அமைச்சின் சில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg