Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு! ஜுனில் இருந்து போராட்டம்

In இலங்கை
Updated: 17:11 GMT, May 21, 2018 | Published: 17:05 GMT, May 21, 2018 |
0 Comments
1409
This post was written by : Jeyachandran Vithushan

தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக செயற்படுவதாக தெரிவித்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ், இதற்கு எதிராக எதிர்வரும் ஜூன் மாதத்தில் இருந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கூறினார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது எனவே, மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட அரசாங்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியை பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது நாட்டில் பொருட்கள் மீதான வரி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg