Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு!

In இலங்கை
Updated: 17:23 GMT, May 21, 2018 | Published: 17:23 GMT, May 21, 2018 |
0 Comments
1063
This post was written by : Vithushagan

ஊடகவியலாளர்   வி. மைக்கல்கொலின் சிறுகதைத் தொகுப்பான பரசுராம பூமி நூல் வெளியீட்டு நிகழ்வு  மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வின் 33 ஆவது தொடராக நடைபெற்ற இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி ஏ.ஏ. நவரட்ணம் நவாஜி அடிகளாரின் தலமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மா. உதயகுமாருக்கு   முதல் பிரிதியை தமிழ்ச் சங்கத் தலைவர் வி. ரஞ்சிதமூர்த்திக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார்.

கவிஞர் அ.ச. பாய்வாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை சிரேஷ்ட உதவிச் செயலாளரும் சமூக ஆய்வு எழுத்தாளருமான வி. தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் மு. கணேசராஜா உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தொன்மங்களையும், மறை நூல்களையும் மீட்டிப் பார்க்கும் பாரதத்தின் இரு கதைகள், இராமாயணம் மற்றும் வேதாகமத்தில் தலா 3 தொகுப்புகளையும், தமிழ் தேசிய அரசியல் மற்றும் ஞானம் என்பவற்றை உள்ளடக்கிய பஞ்ச முகங்கள் கொண்ட பரசுராம பூமி 9 கதைகள் கொண்ட தொகுப்பாக உள்ளதாக தமிழர் தளம் இணை ஆசிரியர் ச. மணிசேகரன் நூல் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

இத்தொகுப்பில் குருசேத்திரம் அரசியல் ரீதியாகவும், பரசுராம பூமி முள்ளி வாய்க்கால் பற்றியும், ஓர்மம் ஊர்நிலை பற்றி பெண்கள் பேசும் பெண்களின் கதைகளும், பலம் மற்றும் இராவநாசம் என்பன தொகுக்கப்பட்ட அரமாக அடங்கியுள்ளது என மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg