Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வற்றாப்பளை அம்மனுக்கு விளக்கேற்ற கடல் தீர்த்தம்!

In ஆன்மீகம்
Updated: 05:23 GMT, May 22, 2018 | Published: 05:23 GMT, May 22, 2018 |
0 Comments
1213
This post was written by : Varshini

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வின் பிரதான அம்சமாக காணப்படும் கடல்நீர் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. உற்சவத்தில் முக்கிய நிகழ்வாக கடல்நீர் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு அமைகின்றது. இந்த நீரைக் கொண்டு அம்மனுக்கு விளக்கேற்றுவது அற்புத நிகழ்வாகும். இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) மாலை முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில் கடல்நீர் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்ட தீர்த்தக் குடத்தில், முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில் தீர்த்தம் எடுக்கப்பட்டு மீண்டும் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

அங்கு உப்புநீரில் விளக்கேற்றப்பட்டதோடு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வழிபாடுகள் நடைபெற்று அன்றைய தினம், முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் பொங்கல் விழா நடைபெறும்.

தொடர்ந்து மறுநாள் அதிகாலை முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு அன்றையதினம் ஆலயத்தில் விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg