Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை – மனோ

In இலங்கை
Updated: 11:10 GMT, May 22, 2018 | Published: 11:10 GMT, May 22, 2018 |
0 Comments
1167
This post was written by : Yuganthini

நாட்டில் இனம், மதம், மொழி ரீதியாக குழப்பங்களை விளைவிப்பவர்களை ஒழிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் ‘இலங்கையர் எம் அடையாளம் பன்மைத்துவம் எமது சக்தி’ என்னும் ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டும் நடவடிக்கைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.

இதில் அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார். பின்னர் அவரும் பஸ்களில் ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிதுறை பிரதி அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா மற்றும் அமைச்சின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது அங்கிருந்த பேருந்துகளை பார்வையிட்ட அமைச்சர் மனோ கணேசன், மொழி பிழையாக எழுதப்பட்டிருந்த பேருந்துகளின் பெயர்ப்பலகைளை உடனடியாக மாற்றுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg