Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராஜபக்ஷாக்களை தண்டிக்கும் திராணி அரசாங்கத்திற்கு இல்லை! – அசாத் சாலி

In இலங்கை
Updated: 11:58 GMT, May 22, 2018 | Published: 11:58 GMT, May 22, 2018 |
0 Comments
1153
This post was written by : Varshini

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகளுக்கு காரணமாக அமைந்த ராஜபக்ஷாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு திராணியில்லையென கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றஞ்சுமத்தியுள்ளார். அத்தோடு, கடந்த மூன்று வருட காலமாக ராஜபக்ஷாக்களை பாதுகாக்கும் வேலையையே அரசாங்கம் செய்து வந்துள்ளதென்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அத்தோடு, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மிகவும் மோசமான ஒரு அரச அதிகாரியாகவும் வெள்ளை வான் கலாசாரத்தை உருவாக்கியவருமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருந்தார். எனினும், தன்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென தெரிந்துகொண்டு, தன்னை வீழ்த்தும் செயற்பாடாக மங்கள பொய்கூறியுள்ளதாக நேற்று முன்தினம் பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கோட்டா குறிப்பிட்டிருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அசாத் சாலி, வெள்ளைவான் கலாசாரத்தை உருவாக்கி வியாபாரிகள் கடத்தப்பட்டதாகவும், ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார். தொலைக்காட்சி நிலையங்களை தாக்கி, தனக்கு வேண்டப்படாதவர்களை நாட்டை விட்டு துரத்திய கோட்டா, அவ்வாறு செய்யவில்லையென்று சொல்வது நகைப்பிற்குரியதென மேலும் தெரிவித்தார்.

மேலும் பாதுகாப்புப் படையினர் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லையென்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அசாத் சாலி குறிப்பிட்டார். கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் உள்ளிட்ட கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவற்றின் மூலம் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதுகாப்புப் படையினரும் உள்ளனர் என்பதை மறுக்க முடியாதென அசாத் சாலி குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg