Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மண்சரிவு அபாயம்: கினிகத்தேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை!

In இலங்கை
Updated: 16:12 GMT, May 22, 2018 | Published: 16:12 GMT, May 22, 2018 |
0 Comments
1082
This post was written by : Vithushagan

மண்சரிவு எச்சரிக்கையை அடுத்து கினிகத்ஹேன நாவலப்பிட்டிய பிரதான  வீதியிலுள்ள 52 வியாபார நிலையங்களை அகற்றுமாறு  கினிகத்ஹேன பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பிரதான வீதிக்கு அருகிலுள்ள மகாவலி கங்கையின் கிளை ஆறான ஹட்டன் ஓயாவுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள  52 கடைகளுக்கே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் இவ்விடம் கடந்த 2004 ஆம் ஆண்டிலும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண் சரிவு அபாயம் உள்ள இடம் என அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வியாபார நிறுவனங்களின் கட்டிடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பாதையின் சில பகுதிகளிலும் மண் சரிவுக்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, இதற்கு முன்னர் தமக்கு கினிகத்தேன  பேருந்து நிலையத்துக்கு அருகில் கடைகள் அமைத்துத் தருவதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டும், இதுவரை அவை நிறைவேற்றப்பட வில்லையெனவும், கடைகள் அமைத்துத் தரும் வரையில் அவ்விடத்தை விட்டும் செல்ல மாட்டோம் எனவும் 52 வியாபார நிறுவன உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg