Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 04:38 GMT, May 23, 2018 | Published: 04:38 GMT, May 23, 2018 |
0 Comments
1131
This post was written by : Litharsan

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினரும் கட்டைவேலி ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் தலைவருமான மயில்வாகனம் ஜெகநாதன் (50) மற்றும் அவரது மகன் ஜெகநாதன் சஞ்சீவன் (29) ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

கரணவாய் கிழக்கு, கரவெட்டியில் இன்று (புதன்கிழமை) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டிஷ் ரி.வி. வேலை செய்யாத காரணத்தால் வீட்டின் முன் வீதியிலிருந்த கேபிள் ரி.வி. இணைப்பில் வயரைப் பொருத்த முற்பட்ட போது அதியுயர் மின்ழுத்தம் தாக்கியதாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg