Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 11:24 GMT, May 23, 2018 | Published: 11:24 GMT, May 23, 2018 |
0 Comments
1086
This post was written by : Vithushagan

திருகோணமலை, கோமரங்கடவெல வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட மதவாச்சி சிங்கள மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி, கிழக்கு மாகாண  ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால்  பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (புதன்கிழமை) காலை  ஆளுநர் அலுவலகத்தின் பிரதான கதவை மூடி   இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருவதாகவும் தங்களுடைய பிள்ளைகளைக் கல்வியாளர்களாக உருவாக்க வேண்டுமென நினைக்கின்ற போதிலும் தங்களுடைய பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கு எதுவித அபிவிருத்திகளும் செய்யப்படவில்லையென, குறித்த பெற்றோர்கள் குற்றஞ்சாட்டினர்.

மதவாச்சி சிங்கள மகா வித்தியாலயத்தில் தரம் 1 தொடக்கம் 11 வரை வகுப்புகள் காணப்படுவதாகவும் 294 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் தெரிவித்த பெற்றோர்கள், அங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு, இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரி நின்றனர்.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் திருகோணமலை – கண்டி பிரதான வீதியையும் வழி மறித்தமையால் அவ்வழிக்கான போக்குவரத்தும் சில மணி நேரம் தடைப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg