Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களுக்கு உரிய சேவைகளை வழங்க மத்திய அரசு தடையாக உள்ளது – விவசாய அமைச்சர்

In இலங்கை
Updated: 11:19 GMT, May 23, 2018 | Published: 11:17 GMT, May 23, 2018 |
0 Comments
1055
This post was written by : Litharsan

கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களங்கள் மக்களுக்கு உரிய சேவையை வழங்கக்கூடிய வகையில் இல்லையெனவும், அதற்குப் பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளதாகவும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கால்நடை வளர்ப்பாளர்களின் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் கூடுதலாக கால்நடை வளர்ப்பினையே மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற நோய்கள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை ஆலோசனைகளைப் பெறுவதில் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் வடக்கு விவசாய அமைச்சர் கூறுகையில், “புதுக்குடியிருப்பு பிரதேச கால்நடை சுகாதார அபிவிருத்தி திணைக்களத்தின் ஆளணி வசதி மற்றும் வாகன வசதி என்பன இல்லாத காரணத்தினால் பண்ணையாளர்களுக்கு உரிய சேவைகளை வழங்கமுடியாதிருப்பதாக புதுக்குடியிருப்பு பிரதேச கால்நடை சுகாதார அபிவிருத்தி திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திணைக்கத்திற்கான வாகனத் தேவைகள் பல தடவைகள் முன்வைக்கப்பட்டபோதும் அதற்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் சிறப்பான சேவையை மக்களுக்கு ஆற்றமுடியாத நிலையேற்பட்டுள்ளது. இந்தப்பிரச்சினை வடக்கு மாகாணத்தில் உள்ள சகல இடங்களிலும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

இவற்றில் பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருப்பதால் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கமுடியாதுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg