Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாகாணசபைத் தேர்தல் எப்போது? – சபாநாயகர் பதில்

In இலங்கை
Updated: 14:53 GMT, May 23, 2018 | Published: 14:53 GMT, May 23, 2018 |
0 Comments
1116
This post was written by : Litharsan

மாகாணசபைத் தேர்தல் தொடர்பிலும் எல்லை நிர்ணய அறிக்கை சம்பந்தமாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாராத்தில் அறிவிக்கவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2018 மார்ச் மாதம் எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பிற்போடாமல் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார். எனினும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், “இந்த பிரச்சினை பிரதமருடன் கலந்துரையாடினேன். அதற்குப் பிரதமர் சுதந்திரக் கட்சியுடன் கலந்துரையாடவேண்டியுள்ளது என அவர் கூறியுள்ளார். எனினும் இப்பிரச்சினை குறித்து இவ்வாரம் அவர் அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். அதன் பின்னர் எம்மால் விவாதிக்ககூடியதாக இருக்கும். சபை முதல்வருக்கும் இது தொடர்பில் அறிவிக்கவுள்ளேன்”என்றார்.

அதேவேளை “மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்கமுடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாகாணசபைத் தேர்தலும் அரசியலமைப்புடன் தொடர்புபடுகின்றது. எனவே, சபாநாயகரும் அரசியலமைப்பை மீறும் வகையில் செயற்படக்கூடாது” என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதன்போது குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg