Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத சிகரெட்டுடன் நாட்டுக்கு வந்தவருக்கு அபராதம்

In இலங்கை
Updated: 10:45 GMT, May 24, 2018 | Published: 10:37 GMT, May 24, 2018 |
0 Comments
1049
This post was written by : Yuganthini

குவைத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சிகரெட்டை நாட்டுக்கு கொண்டுவந்த நபருக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சுங்க பிரிவினர்  தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (வியாழக்கிழமை) வந்தடைந்த நபரிடம் நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த சட்டவிரோத சிகரெட்டுகள் சிக்கியுள்ளன.

இவர் கொழும்பு, கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவரென சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபரிடமிருந்து 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 30,000 சிகரெட்டுக்கள் உள்ளடங்கிய 150 பெட்டிகளை  சுங்கப்பிரிவினர்  மீட்டதுடன் அதனை அரசுடமை ஆக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg