Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோடிகளுக்காக படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீதேவி: வெளியானது புதுத் தகவல்!

In இந்தியா
Updated: 11:26 GMT, May 24, 2018 | Published: 11:26 GMT, May 24, 2018 |
0 Comments
2220
This post was written by : Ravivarman

நடிகை ஸ்ரீதேவி காப்புறுதிப் பணத்திற்காகக் கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது இறப்புக் குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல்துறையின் ஓய்வுபெற்ற உதவி ஆணையாளர் வேத் பூஷண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஸ்ரீதேவி பெயரில் 240 கோடி ரூபாய் காப்பீடு இருந்தது எனவும் இந்த காப்பீட்டின் நிபந்தனைப்படி ஸ்ரீதேவி டுபாயில் இறந்தால் மட்டுமே குறித்த காப்புறுதிப்பணம் கிடைக்கும் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாகவும் பூஷண் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நடிகை ஸ்ரீதேவி டுபாயில் தங்கியிருந்த நட்சத்திரவிடுதி பிரபல பாதாள உலகத் தலைவனான தாவுத்தினுடையது எனவும், அவனுக்கும் சவுதி இளவரசருக்கும் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாகவும் பூஷண் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்ரீதேவியின் இரத்த மாதிரிகளையும் அவரது நுரையீரலுக்குள் எவ்வளவு தண்ணீர் இருந்தது என்ற விபரத்தையும் டுபாய் பொலிஸார் தரமறுத்துவிட்டதாகவும், அவரது பிரேத பரிசோதனை அறிக்கை மட்டுமே கொடுத்துள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீதேவி திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டதாக உறுதியாகக் கூறிவரும் பூஷண், மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக அதே விடுதியில் தமது புலனாய்வுக் குழுவுடன் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg