Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தூத்துக்குடிப் படுகொலைகளுக்கு சத்தியராஜ் இரங்கல்!

In இந்தியா
Updated: 11:31 GMT, May 24, 2018 | Published: 11:31 GMT, May 24, 2018 |
0 Comments
1530
This post was written by : Ravivarman

தூத்துக்குடியில் இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நடிகர் சத்தியராஜ் தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தூத்துக்குடியில் நடந்த படுகொலைக்கு எனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கின்றேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தந் சம்பவம் எமது மனதைப் பதைக்க வைப்பதுடன், அனைவரையும் வேதனைப்பட வைத்துள்ளது. உடனடியாக ஸ்ரெரலைட் ஆலையினை மூடுவதுடன் மக்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும்.

இந்த விடயத்தில் நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது உலகத்தில் எங்கோ ஓர் மூலையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் முதலாளி முக்கியமா அல்லது இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் எமது சொந்தங்களும் எமது தமிழ் மக்களும் முக்கிமா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் பெண்கள் மாணவி உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் உங்களில் ஒருவனாக எனது ஆழ்ந்த இரங்கல்கள்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg