Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தூத்துக்குடியில் நடந்தது திட்டமிட்ட படுகொலையா? – ஜனநாயகம் எங்கே?

In இந்தியா
Updated: 13:57 GMT, May 24, 2018 | Published: 13:57 GMT, May 24, 2018 |
0 Comments
1123
This post was written by : Litharsan

இரக்கமின்றி தமிழகத்தில் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட விடயம் தற்போது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் உலுக்கியுள்ள விடயமாக காணப்படுகின்றது.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை விவகாரம் திட்டமிட்ட வகையிலான செயற்பாடுகள் என்ற சர்ச்சைகள் வலுவடைந்து புரட்சிகளை தோற்றுவிக்கும் வகையிலான பாதையினை உருவாக்கி விட்டது என்றே கூறவேண்டும்.

உண்மையில் இந்த போராட்டத்தின் மீதான துப்பாக்கிச்சூட்டை அரசாங்கம் திட்டமிட்டு நடத்தியதா? அரங்கேற்றப்பட்ட படுகொலைகள் திட்டமிட்டவை என்றாலும் இது எதனால் மேற்கொள்ளப்பட்டது, பின்னணி என்ன என்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

வேதாந்தா நிறுவனம் போராட்டத்தை முடக்க மாத்திரமே முயன்று வந்தது. அரசியல்வாதிகளுக்கு 5 கோடிகள் வரையிலும் பேரங்கள் பேசப்பட்டன ஆனால் பொது மக்களின் கோரிக்கை குறித்தோ அவர்களின் நலன் குறித்தோ ஆராயப்படவில்லை எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தப்படப்போகின்றார்கள் என்ற செய்தி அதற்கு முன்னரே பலர் முலமாக பரப்பப்பட்டு வந்தது என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கது.

ஸ்டெர்லைட் ஆலை என்பது அனில் அகர்வால் எனப்படும் பிரபலத்திற்கு சொந்தமானதாகும். இதன் தலைமையகம் இங்கிலாந்தில் இயங்கி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. வேதாந்தா ரிசோர்ஸ் என்ற நிறுவனப் பெயருடனேயே இந்த ஸ்டெர்லைட் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் முக்கிய உற்பத்தி கொப்பர் எனப்படும் தாமிரம் ஆகும். இது தவிர தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம் போன்றவை கழிவு உற்பத்திகளாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இந்த நிறுவனம் தமிழகத்தில் நடத்துவதற்கு பல்வேறு சிக்கல்கள் உருவாகின. தூத்துக்குடியில் இந்த ஆலை உருவாக 1994 இல் அடிக்கல் நாட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆலை இயங்க அனுமதியளித்தார். அன்று முதல் இன்று வரையிலும் இதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

இதற்கெதிராக 1996 ஆம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தப்பட்டது. அன்று வெடித்த போராட்டம் தென் மாவட்டத்தில் வெடித்த சாதிச் சண்டை காரணமாக நீர்த்துப்போனது. சுற்றுச் சூழல் பாதிப்புகள் இதனால் மிக அதிகம். இதனால் 1997 ஆம் ஆண்டே முதல் வழக்கு பதியப்பட்டு விட்டது. அதேபோன்று 1997 ஆம் ஆண்டு இங்கு முதலாவது விபத்து நடந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த விபத்துகளில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து வெடித்த சர்ச்சைகள் காரணமாக குறித்த ஆலைக்கு எதிராக தடைகளும் மீண்டும் திறக்க அனுமதியும் வழங்கப்பட்டு வந்துள்ளன.

இதன் உச்ச கட்ட முடிவு இன்று படுகொலைகளுடன் அரங்கேற்றப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் இப்போது நடந்த சம்பவங்களுக்கு அரசாங்கமும் ஆட்சியாளர்களும் பதில் கூறியாக வேண்டிய கட்டாயம் உண்டு. ஏவலின் அடிப்படையில் உயிர்கள் காவு கொள்ளப்படுமாயின் உண்மையான ஜனநாயகம் எங்கே??

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg