Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு கிழக்கு கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படும்: சுவாமிநாதன்

In இலங்கை
Updated: 15:29 GMT, May 24, 2018 | Published: 15:29 GMT, May 24, 2018 |
0 Comments
1086
This post was written by : Vithushagan

2020ஆம் ஆண்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கை கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது என புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து காலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) முகமாலைப் பகுதியை மக்கள் குடியேற்றத்திற்கு உகந்த பகுதியாக உறுதி செய்து, மேற்படி பகுதியில் மீள் குடியேற்றத்திற்காக காத்திருக்கும் சுமார் 300 குடும்பங்களும் எப்போது மீளக்குடியேற்றப்படும் என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், “ யுத்த காலத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொண்ட முகமாலை முன்னரங்கு பகுதி பிரதேசத்தில் நிலக்கண்ணிவெடி அதிகமாக பல அடுக்குகளாக புதைக்கப்பட்டுள்ள காரணத்தினால் இந்த நிலக்கண்ணிவெடிகளை மிக விரைவில் அப்புறப்படுத்தி மீள் குடியேற்றங்களை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்கள் உள்ளன.

இப்பகுதியில் 8.38 சதுர கிலோமீட்டர் பரப்பில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டிருந்தது. இதில் 3.61 சரது கிலோமீட்டர் பரப்பில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 4.78 சதுர கிலோமீட்டர் பரப்பில் 4.01 பரப்பில் தற்போது இலங்கை தரைப்படைகளின் நிலக்கண்ணிவெடி அகற்றும் பிரிவுடன் டாஸ் அமைப்பு, மெக் அமைப்பு, ஷார்ப் அமைப்பு, ஹலோ டிரஸ்ட் அமைப்பு ஆகியன இந்த நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒட்டாவா மாநாட்டில் இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் சர்வதேச சமவாயத்தில் இலங்கை கடந்த 2017ஆம் ஆண்டு கைச்சாத்திட்டுள்ளது. அதற்கமைய உலக நாடுகளின் கண்ணிவெடிகள் அகற்றும் அமைப்புகளுடன் இணைந்து 2020ஆம் ஆண்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கை கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்த எனது அமைச்சு செயற்பட்டு வருகின்றது. உலக நாடுகளின் இவ்வாறான நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் அமைப்புகளும் பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளன” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg