Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தூத்துக்குடி கலவரம்: பொதுமக்கள் கடலில் இறங்கி போராட்டம்

In இந்தியா
Updated: 05:48 GMT, May 25, 2018 | Published: 05:47 GMT, May 25, 2018 |
0 Comments
1171
This post was written by : Kemasiya

தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கடலில் இறங்கி ராமேஸ்வர மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ராமேஸ்வர மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு இப்போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, மோடி அரசு மற்றும் எடப்பாடி அரசே பதவி விலகு, ஸ்டெர்லைட்டை மூடு ஆகிய வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழகமெங்கும் 144 தடையுத்தரவு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், தடையையும் மீறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg