Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடுகள்: வஜிர அபேவர்தன

In இலங்கை
Updated: 10:17 GMT, May 25, 2018 | Published: 10:17 GMT, May 25, 2018 |
0 Comments
1058
This post was written by : Ravivarman

அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை பாதிப்புக்கள் குறைவாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில், காலி மாவட்டத்திற்கு 80 கோடி ரூபாவும், களுத்துறை மாவட்டத்திற்கு 100 கோடி ரூபாவும், மாத்தறை மாவட்டத்திற்கு 150 கோடி ரூபாவும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு 200 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனர்த்த நிலைமைகள் குறித்து பொதுமக்கள் 1902 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு அறிவிக்க முடியும்.

தமது வீட்டிற்கோ, சொத்துக்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலைமையில் கிராம உத்தியோகத்தருக்கு அல்லது பிரதேசத்தைச் சேர்ந்த கள உத்தியோகத்தர்களுக்கு அறியத் தரலாம்” அமைச்சர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg