Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார்  மாணவர்களின் ஓவியக்கண்காட்சி  

In இலங்கை
Updated: 10:34 GMT, May 25, 2018 | Published: 10:34 GMT, May 25, 2018 |
0 Comments
1131
This post was written by : Yuganthini

சமூக வாழ்வியலை மையப்படுத்திய ஒவியக்கண்காட்சி மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

குறித்த ஓவியக் கண்காட்சி மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில்  சித்திரத்தை  பிரதான  பாடமாக  கற்க்கும் மாணவர்களின்  ஒழுங்கமைப்பில்  மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் உயர் தர  கலை பிரிவு  மாணவர்களான ஜே.கிளின்டன் டலிமா, வி.என்.கிறிசாந்தன், அந்தோன் கிசான், என்.அஸ்மீன், ஜி.ஜெருசன், என்.பவித்திரன் ஆகிய ஆறு மாணவர்களின் சுய ஆக்கங்கள் குறித்த ஓவியக்கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதில்  சமூக வாழ்வியலை  மையமாகக் கொண்டு காணப்படும் சுமார் 100 க்கும்  மேற்பட்ட ஓவியங்கள்  மற்றும் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

குறித்த ஓவியக்கண்காட்சியில் மன்னார் வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்டியன், மன்னார் வலய கல்வி பணிமனையின் உதவி உடற்கல்வி பொறுப்பதிகாரி பி.எம்.எம்.சில்வா மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர் கலந்துகொண்டதோடு பாடசாலை மாணவர்களும்  ஓவியக்கண்காட்சியினை பார்த்து மகிழ்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg