Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்!

In இலங்கை
Updated: 12:47 GMT, May 25, 2018 | Published: 13:41 GMT, May 25, 2018 |
0 Comments
1052
This post was written by : Ravivarman

இலங்கையில் தற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வழிப்புணர்வுக் கருத்தரங்கு மன்னார் நகரத்தில் அமைந்துள்ள குடும்ப புனர்வாழ்வு நிலையத்தில் இன்று மாலை 1.30 மணியளவில் இடம் பெற்றது.

இலங்கையில் தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் கரையோர பகுதிகளூடாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள குழுவினர் இன்று மன்னார் பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.

கரையோர பகுதிகளூடாக 73 நாட்களும், 1460 கிலோ மீற்றர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள குறித்த குழுவினர் மன்னார் நகருக்கு வருகை தந்துள்ளதுடன், தற்கொலை தடுப்பு தொடர்பான விழிர்ப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக மன்னார் மாவட்ட பகுதிகளில் உளவியல் ரீதியான சேவைகளை மேற்கொண்டு வரும் பிரதிநிதிகளுக்கு குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சியில் மன்னார் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக கடமையாற்றும் பல்வேறு தொண்டர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg