Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்!

In இலங்கை
Updated: 12:56 GMT, May 25, 2018 | Published: 15:12 GMT, May 25, 2018 |
0 Comments
1140
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு மாநகரசபையினால் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்துவருவதன் காரணமாகவும் டெங்கு தாக்கத்தில் இலங்கையில் மூன்றாவது இடத்தில் மட்டக்களப்பு இருப்பதன் காரணமாகவும் நுளம்பு பெருகும் இடங்களை அழிக்கும் வகையில் இந்த விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பணிமனை என்பன இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எஸ்.மணிவண்ணன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வீடுகளில் மற்றும் வெற்றுக்காணிகளில் காணப்பட்ட நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் நுளம்பு பெருக்கம் ஏற்படும் வகையில் காணப்பட்ட பொருட்கள் அகற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் டெங்கின் தாக்கம் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் இந்த ஆண்டு 600க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன் இருவர் மரணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg