Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்கள் தீர்விற்கு தென்னிலங்கை இனவாதிகள் இடமளிப்பார்களா? – மாவை

In இலங்கை
Updated: 12:23 GMT, May 26, 2018 | Published: 12:23 GMT, May 26, 2018 |
0 Comments
1067
This post was written by : Jeyachandran Vithushan

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இன வாதிகள் இடமளிப்பார்களா? என தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சந்தேகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான உருவாக்க பணிகள் குறித்து மாவை சேனாதிராஜாவிடம் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

புதிய அரசியலமைப்புக்கான வழிகாட்டல் குழுவில் சிறீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்துள்ளதாக அறிய முடிகிறது. எமது கட்சி சார்பில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நா டாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உள்ளனர்.

குறித்த கூட்டம் நடைபெற்ற போது காலநிலை சீரின்மையால் நான் யாழ்ப்பாணம் திரும்பவேண்டியிருந்ததால் அந்த கூட்டம் தொடர்பாக அறிய முடியவில்லை. ஆனால் அண்மைய செய்திகளை அவதானிக்கும்போது பெரும்பான்மையான ஒத்துழைப் புடன் புதிய அரசியலமைப்பு விரைவில் நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

ஆனாலும் தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் அல்லது தமிழ் மக்கள் விரும்பும் வகையிலான தீர்வு ஒன்று வருவதற்கு தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் அல்லது எதிரணியில் உள்ளவர்கள் எந்தளவுக்கு இடமளிப்பார்கள்? என்பதில் எமக்கு பாரிய சந்தேகம் அல்லது அச்சம் உள்ளது. ஆகவே பொறுத்திருந்தே சில விடயங்களை பார்க்கவேண்டியுள்ளது.

மேலும், இலங்கையில் புதிய அரசியல் அமைப்புக்கான வரைபு வெகு விரைவில் சமர்பிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையுடன் இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg