Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா – தென்கொரியாவுக்கிடையில் முக்கிய சந்திப்பு!

In உலகம்
Updated: 13:48 GMT, May 26, 2018 | Published: 13:48 GMT, May 26, 2018 |
0 Comments
1087
This post was written by : Litharsan

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே ஆகியோருக்கிடையிலான ரகசிய சந்திப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இரு நாடுகளுக்குமிடையிலான எல்லைப்பகுதிக் கிராமமான பன்முன்ஜோம் என்னும் இடத்தில் சுமார் 2 மணித்தியாலங்கள் இந்த உரையாடல் இடம்பெற்றது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் நடைபெறவிருந்த நிலையில், அந்தப் பேச்சுவார்த்தை ரத்துச்செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக விரிவான அதிகாரப்பூர்வ தகவல் நாளை வெளியிடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg