Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

In இலங்கை
Updated: 14:43 GMT, May 26, 2018 | Published: 14:43 GMT, May 26, 2018 |
0 Comments
1174
This post was written by : Litharsan

கிளிநொச்சியில் வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளருக்கு எதிராக பேருந்து உரிமையாளர்கள் இன்று (சனிக்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் இன்று உள்ளூர் மற்றும் வெளியூருக்கான போக்குவரத்து சேவைகள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெறவில்லை.

வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் கிளிநொச்சி பேருந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வகையில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி, வலைப்பாட்டு கிராமத்திற்கு வவுனியா மாங்குளம் மல்லாவி ஊடாக பேரூந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா – மாங்குளம் – கிளிநொச்சி ஊடாக பூநகரிக்கும் ஒரு பேரூந்து சேவைக்கான அனுமதியை வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வழங்கியுள்ளார் எனக் குறிப்பிட்டே இந்த பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமையாளர் பெரும் நெருக்கடிக்குள் மத்தியில் போதுமான சேவையினை மீள்குடியேற்றம் காலம் தொடக்கம் வழங்கி வருகின்றனர். எனினும் வவுனியாவிலிருந்து நேரடியாக பேரூந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கியிருப்பதால் கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமையாளர்களை பெரிதும் பாதித்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு முன் உரிமை மாற்றம் செய்யப்பட்ட அனைத்து தற்காலிக வழியனுமதிபத்திர உரிமையாளர்களையும் வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் ரூபா ஒரு இலட்சம் செலுத்த வேண்டுமென அறிவித்துள்ளமையையும் கண்டிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரையாடுவதாக தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg