Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி

In இலங்கை
Updated: 15:06 GMT, May 26, 2018 | Published: 15:06 GMT, May 26, 2018 |
0 Comments
1356
This post was written by : Litharsan

தமிழ் மக்கள் பேரவைக்குரிய யாப்பு விரைவில் தயாரிக்கப்படவுள்ளதுடன், இளைஞர் மற்றும் யுவதிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக வடக்க மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவரான சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நடவடிக்கைகளுக்குத் தீர்வாக இளைஞர்களையும் யுவதிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற கருத்தினை முன்னரே ஏற்றுக்கொண்டிருந்தோம். அதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவைக்கென ஒரு யாப்பு இதுவரையில் தயாரிக்கப்படவில்லை. அந்த யாப்பின் அடிப்படையில் ஏனைய நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். யாப்பு உருவாக்குவது தொடர்பில் உடனடியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் இருந்தும் பலர் கலந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் பல பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறினார்கள். அங்கு நடைபெறும் பிரச்சினைக்குரிய நடவடிக்கைகள் வேறுவிதமாக இருக்கும். எனவே, அங்கிருந்து வரும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வர தீர்மானித்துள்ளோம்.

அரசியல் ரீதியாக எமது இளைஞர்கள் மத்தியில் எவ்வாறான விடயங்களை கொண்டு சேர்க்க வேண்டுமென்று சில செயற்பாடுகள் உள்ளன. காலாதி காலமாக தமிழ் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சுயாட்சி ஆகியவை தெரிவிக்கப்பட்டு வந்துள்ளன. ஆகையால், இவற்றின் முக்கியத்துவத்தினை பொது மக்களுக்கும், இளைஞர் யுவதிகளுக்கு எடுத்தியம்ப வேண்டும்” என்று தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg