Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நன்றி கூறவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா?

In இலங்கை
Updated: 16:17 GMT, May 26, 2018 | Published: 16:17 GMT, May 26, 2018 |
0 Comments
1682
This post was written by : Jeyachandran Vithushan

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று  (சனிக்கிழமை) இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அமைச்சர் சுவாமிநாதனுக்கும் மக்களும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில், மீள்குடியேற்ற மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்துகொண்டார். அமைச்சரின் வருகையை அறிந்த கேப்பாப்புலவு நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், அங்கு சென்று தமது காணிகளை விடுவித்துத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

நிகழ்வில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், புவனேஸ்வரன் மற்றும் மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோரை வெளியேறவிடாது தடுத்து நிறுத்தினர். நிகழ்வு நிறைவடைந்த பின்னர் அமைச்சரையும் செல்லவிடாமல் தடுத்த மக்கள், தமக்கு தீர்வை பெற்றுத்தருமாறு வலியுறுத்தினர்.

452 நாட்களாக தாம் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற போதும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லையென தெரிவித்த மக்கள், தமக்கு பதில் வழங்குமாறு தொடர்ச்சியாக கோரினர்.

எனினும், மக்களுக்கு பதில் வழங்க மறுத்த அமைச்சர் சுவாமிநாதன், தம்முடன் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவிடம் இது தொடர்பில் வினவுமாறும் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி, ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிக்காக பொன்னகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு நன்றிகூறவில்லை என்பதற்காக அவரை அங்கிருந்து வெளியேறுமாறும் அமைச்சர் பணித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது. எனினும், தமது பிரச்சினைக்கு தீர்வை வழங்கிவிட்டுச் செல்லுமாறு மக்கள் அழுத்தம் கொடுத்ததை தொடர்ந்து பொலிஸார் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களது உதவியுடன் அமைச்சர் அங்கிருந்து சென்றுள்ளார். அத்துடன் ஊடகவியலாளர்களையும் ஒளிப்பதிவு செய்ய வேண்டாமென தடுத்துள்ளார்.

படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென போராடி வரும் தம்மை அமைச்சர் உதாசீனப்படுத்தியதாக தெரிவிக்கும் மக்கள், உரிய அதிகாரிகள் தலையிட்டு தமக்கு நீதியை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg