Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி

In இந்தியா
Updated: 16:45 GMT, May 26, 2018 | Published: 16:45 GMT, May 26, 2018 |
0 Comments
1131
This post was written by : Jeyachandran Vithushan

ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும். மே 24ஆம் திகதி அதிகாலை ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தொழிற்சாலை எந்த விதத்திலும் தான் தன்னிச்சையாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை பயன்படுத்த முடியாது. ஆலை பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுவந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டிலேயே ஆலைக்கான மின் இணைப்பை துண்டிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதை எதிர்த்து ஆலை நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தை அணுகி அனுமதி பெறப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனம் இயங்குவதற்கான இசைவாணை மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் ஆலை இயங்க ஏப்ரல் 9ஆம் திகதி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க மறுத்தது. அதன் பின் ஆலை இயங்கவில்லை. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg