Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு! (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 09:32 GMT, May 27, 2018 | Published: 04:26 GMT, May 27, 2018 |
0 Comments
1184
This post was written by : Varshini

மாதம்பே – கல்கம பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் டிலான் சம்பத் (வயது-29) என்ற உத்தியோகத்தருக்கே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி வெள்ள நீரில் காணாமல் போன குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், உயிரிழந்த நிலையில் அவரது சடலம் இன்று கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு!

மாதம்பே – கல்கம பகுதியில் அனர்த்த மீட்பு நடவடிக்கையின் போது வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன பொலில் உத்தியோகத்தர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாரம்மல பகுதியைச் சேர்ந்த 29 வயதான பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 25ஆம் திகதி அவர் காணாமல் போயிருந்தார். காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 200 மீற்றருக்கு அப்பால் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg