Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்வித்துறையின் பின்னடைவிற்கு வறுமையே காரணம்: மட்டு.அரசாங்க அதிபர்

In இலங்கை
Updated: 11:39 GMT, May 27, 2018 | Published: 11:39 GMT, May 27, 2018 |
0 Comments
1052
This post was written by : Yuganthini

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற வறுமை நிலைமையே கல்வியில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு காரணமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

எமது பகுதியில் கல்வி செயற்பாடுகளை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற போதிலும் நாடளாவிய ரீதியில் எமது மாகாணம் 8ஆம் இடத்திலேயே உள்ளது.

இதற்கு இப்பகுதி மக்களிடம் நிலவும் வறுமை நிலையே காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் எமது மாவட்டத்தில் தான் மதுபானம், கார், மோட்டார் சைக்கிள் கொள்வனவு, ஆடைகளுக்கு அதிகளவு கொள்வனவு, ஆலயங்களில் வீண் கழியாட்டங்களென அநாவசிய செயற்பாடுகளுக்கு அதிக பணங்களை வீணாக்குகின்றோம்.

இவ்வாறு வீணாக்காமல் அவற்றை சேமித்தால் நாம் வறுமை நிலையை அடையமாட்டோம்.

இதனால் மக்கள் அனைவரும் சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதன்மூலம் எமது சமூகத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்’ என உதயகுமார் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg