Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பானில் மரத்துகளைப் பயன்படுத்தி மதுபானம்

In உலகம்
Updated: 11:45 GMT, May 27, 2018 | Published: 11:45 GMT, May 27, 2018 |
0 Comments
1173
This post was written by : Johnson paiva

ஜப்பானில் Yuichiro Otsuka நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஒருவர் மரத்துகளைப் பயன்படுத்தி   மதுபானம் தயாரித்துள்ளார்.

மரங்கள், நமக்கு கடதாசி றப்பர் போன்ற தேவைகளை நிவர்த்தி செய்யப் பயன்பட்டுவரும் நிலையில் மரத்தினைத் துகளாக்கி நொதிக்கவைப்பதன் மூலம் இயற்கையான மதுபானத்தினைத் தயாரிக்கமுடியுமென அவர் நிரூபித்துள்ளார்.

இரசாயனங்கள் மற்றும் வெப்பத்தினைப் பயன்படுத்தாது எரிபொருட்கள் அல்லது மதுபானம் தயாரித்தல் தொடர்பான ஆய்வினை ஜப்பான் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வருகின்றது இந்நிலையில் தற்போது அதில் வெற்றிகண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த மதுபானத்தினை cherry blossom, cedar மற்றும் white birch மரங்களிலிருந்து தயாரிக்கலாம் எனவும் இந்த மரத்துகளை மரத்தினாலான பரல்களில் இட்டு நொதிக்கவைக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

மரத்துகளினை நீர் மற்றும் ஈஸ்ட் கலந்து நொதிக்கவைப்பதன் மூலம் 10 நாட்களில் மதுபானம் தயாராகிவிடுமெனவும் 4 கிலோகிராம் (8.8 பவுண்ட்) cedar மரத்துகளினைப் பயன்படுத்தி சுமார் 15% அல்கஹோல் உள்ளடக்கப்பட்ட 3.8 லிட்டர் (8 பவுண்ட்) திரவத்தினை உற்பத்தி செய்யமுடியும் எனவும் அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதனைக் கண்டுபிடித்த tsuka என்னும் ஆய்வாளர் கூறுகையில் மரத்துகள் மூலமான மதுபானங்கள் பாதுகாப்பானவை எனவும், குறித்த மதுபானம் தயாரிக்கப்படும் மேற்குறிப்பிட்ட மரங்கள் நீண்டகாலமாக மனிதன் உண்ணக்கூடிய உணவுத் தயாரிப்புகளுக்களோடு தொடர்புடையவையாக இருப்பதனால் பாதிப்புக்கள் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜப்பானியர்கள் விரைவில் மரத்துகளினால் தயாரிக்கப்பட்ட மதுபானத்தினை குடித்து மகிழலாம் என்றார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg