Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசிலிருந்து வெளியேறிய 16 பேரால் கூட்டு எதிரணிக்குள் முறுகல்நிலை: மஹிந்த சமரசம்!

In இலங்கை
Updated: 16:41 GMT, May 27, 2018 | Published: 16:50 GMT, May 27, 2018 |
0 Comments
1485
This post was written by : Ravivarman

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேருடனும் இணைந்து அரசியல் நடத்துவதாக இருந்தால் அவர்களது அரசியல் போக்கினைத் தெளிவாக முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“16 பேரும் பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஓரிரு நாட்களில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என அறிவிக்க முனைவது பிரச்சினைக்குரிய ஒன்றாகும்.

யாருடனாவது இணைந்து இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற பொதுவான கொள்கையில் நாம் செயற்படுகின்றோம் என்பதே உண்மை. ஆனால் அதற்கு அப்பால் சென்று எம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, எம்மிடையே பிரிவினையை உருவாக்க யாருக்கும் இடமளிக்க முடியாது.

இவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் தான் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் செயற்படுகின்றார்களா? என்ற சந்தேகம் எமக்குள் எழுந்துள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருக்கின்றனர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எனவும், மற்றொருவர் கோட்டாபய ராஜபக்ஷ என்கிறார்.

மேலும் இன்னுமொருவர் ஷமல் ராஜபக்ஷதான் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறுகின்றார். இந்த அறிவிப்புக்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg