Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களை நேரில் நலன் விசாரித்த ஓ.பி.எஸ்.

In இந்தியா
Updated: 03:42 GMT, May 28, 2018 | Published: 03:42 GMT, May 28, 2018 |
0 Comments
1068
This post was written by : Risha

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு இன்று (திங்கட்கிழமை) காலை பயணித்த துணை முதல்வர், அங்கு சிகிச்சை பெற்று வருவோரிடம் நலம் விசாரித்துள்ளார்.

துணை முதல்வருடன் அமைச்சர்களான ஜெயக்குமார், கடம்பூர் ராஜு ஆகியோரும் உடன் சென்று காயமடைந்தவர்களிடம் நலன் விசாரித்துள்ளனர்.

தூத்துக்குடியில், ஆர்ப்பாட்டத்தின் போதான பொலிஸாரின் அடாவடியில் 48 பேர் காயமடைந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடியில் தொடர்ந்து நீடித்த பதற்றத்தினால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவு நேற்று நீக்கப்பட்டதை தொடர்ந்து துணை முதல்வர் அங்கு விஜயம் செய்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட தொடர் போராட்டத்தின் 100ஆவது நாளன்று ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றபோது, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனையும் மீறி பேரணி தொடர போராட்டம் வன்முறையாக மாறியதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 13 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg