Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீதி விபத்தில் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு: காங்கிரசின் பலம் சரிவு

In இந்தியா
Updated: 04:19 GMT, May 28, 2018 | Published: 04:16 GMT, May 28, 2018 |
0 Comments
1166
This post was written by : Risha

கர்நாடகா மாநிலத்தின் ஜாம்கண்டி தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சித்து பீ நியாம்கவுடு வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கோவாவில் இருந்து கர்நாடகாவிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, துளசிகேரி என்ற பகுதியில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜாம்கண்டி தொகுதியில் போட்டியிட்ட இவர், பா.ஜ.க. வேட்பாளர் குர்கர்னி ஸ்ரீகாந்த் சுப்புராவை விட 2795 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதன்மூலம் 78 தொகுதிகளில் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபித்திருந்தது. ஆனால், சித்துவின் மறைவு சட்டமன்றத்தில் காங்கிரசின் பலம் 77ஆக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg