Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு

In இலங்கை
Updated: 04:26 GMT, May 28, 2018 | Published: 04:26 GMT, May 28, 2018 |
0 Comments
1260
This post was written by : Yuganthini

தென் மாகாண கல்வி அமைச்சு ஆசிரியர் ஒவ்வொருக்கும் சீருடை பெற்றுக்கொள்வதற்கான காசோலையை வழங்கியுள்ளது. இதன்படி ஒரு ஆசிரியருக்கு தலா 5000 ரூபாய் காசோலையை வழங்கியுள்ளது.

குறித்த நிகழ்வு தெனியாய மத்திய மஹா வித்தியாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் 700 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திமால் ராசபுத்ர சீருடைக்கான காசோலையை வழங்கி வைத்தார்.

இதேபோன்று காலி, மாத்தறை ,அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒன்றறை மில்லியன் ரூபாய் காசோலை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திமால் ராசபுத்ர, தென் மாகாண உறுப்பினர் லால் பேமநாத்,கொட்டப்பொல பிரதேசசபைத் தலைவர் தயானந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென் மாகாணம் தொடர்ந்து 3 வருடங்களாக கல்விதுறையில் சிறந்த இடத்தை வகித்து வருகின்றமையினால் அதற்கு காரணமான ஆசிரியர்களை கௌரவிக்கும் பொருட்டு கல்வி அமைச்சு இந்த காசோலையை வழங்கியுள்ளது.

இந்தவகையில்  தென் மாகாணம் க.பொ.சா.த பரீட்சையில் 2015 ஆம் ஆண்டு 74.23 வீதமும் ,2016 ஆம் ஆண்டு 76.66 வீதமும், 2017 ஆம் ஆண்டு 79.41 வீதமும் பெற்று தொடர்ந்து 3 வருடங்களாக முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg