Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை!

In இலங்கை
Updated: 04:27 GMT, May 28, 2018 | Published: 04:27 GMT, May 28, 2018 |
0 Comments
1137
This post was written by : Varshini

யாழ்.நாவாந்துறை பகுதியில் இருந்து நெடுந்தீவு கடற்பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக, யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன மீனவர்களை தேடும் நடவடிக்கையை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

நாவாந்துறையை சேர்ந்த ஜோன் மல்கன் விமல் (வயது – 44), செபமாலை அலெக்ஸ் (வயது – 35), மகேந்திரன் ரூபன் (வயது – 30) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் நேற்று முன்தினம் மாலை மீன்பிடிக்கச் சென்றதோடு, அவர்களது படகுகளின் இயந்திரம் பழுதடைந்ததாக மீனவர்களில் ஒருவரான ஜோன் தனது மனைவிக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.

அதன் பின்னர், அவர்களுடனான தொடர்பு இல்லாமல் போயுள்ள நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடற்படையின் சுழியோடிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற போதும், இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg