Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்

In இலங்கை
Updated: 06:46 GMT, May 28, 2018 | Published: 05:00 GMT, May 28, 2018 |
0 Comments
1125
This post was written by : Yuganthini

கண்டியில் இடம்பெற்ற இரு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மகாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவை பெண் மருந்தாளர் ஒருவர் தாக்கியுள்ளார்.

அநுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமித் வீரசிங்க காய்ச்சல் காரணமாக கடந்த 24ஆம் திகதி சிறைச்சாலையிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது அவ்வைத்தியசாலையின் பெண் மருந்தாளருக்கும் அமித் வீரசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் பெண் மருந்தாளர் அவரை தாக்கியுள்ளார்.

கடந்த  25ஆம் திகதி அமித் வீரசிங்கவின் மனைவி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு தனது கணவனை பார்க்கச் சென்ற சந்தர்ப்பத்தில் இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் பின்னர், அநுராதபுரம் பொலிஸில் அமித் வீரசிங்கவின் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அமித்த வீரசிங்க, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg