Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

In இலங்கை
Updated: 05:25 GMT, May 28, 2018 | Published: 05:25 GMT, May 28, 2018 |
0 Comments
1099
This post was written by : Yuganthini

மட்டக்களப்பு, ரிதிதென்னை பகுதியில் 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ரிதிதென்னை பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 3.110 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg