Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் அஞ்சலி

In இலங்கை
Updated: 06:54 GMT, May 28, 2018 | Published: 06:54 GMT, May 28, 2018 |
0 Comments
1267
This post was written by : Varshini

இலங்கையின் தென்பகுதியில் நீடித்த சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடியில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

கற்பகபுரம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது இரண்டு சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அஞ்சலி நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜ், வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியத்தின் முக்கியஸ்தர் குணரட்னம், பிரதேச சபை உறுப்பினர்களான ஆர்.விஸ்வநாதன் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg