Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாக தெரிவு

In இலங்கை
Updated: 07:46 GMT, May 28, 2018 | Published: 07:46 GMT, May 28, 2018 |
0 Comments
1151
This post was written by : Varshini

வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றன.

இதன்போது முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் பிரதான பணிகளில் முன்பு இருந்தவர்களே மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர். அதற்கமைய தலைவராக சி.ரவீந்திரனும், செயலாளராக சக்திவேல் சுரேஸூம், பொருளாளராக ரட்ணதாஸூம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

சங்கத்தின் தலைவர் சி.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடந்த வருடத்திற்கான கணக்கறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், விவசாய அமைச்சர் க.சிவநேசன், மாகாணசபை உறுப்பினர்களான ஜி.டி.லிங்கநாதன், சத்தியலிங்கம், தியாகராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg