Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

In இலங்கை
Updated: 07:59 GMT, May 28, 2018 | Published: 07:59 GMT, May 28, 2018 |
0 Comments
1144
This post was written by : Yuganthini

மட்டக்களப்பு, கிரான் பகுதியில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் எதிர்வரும் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த விழிப்புணர்வு பேரணியை கிரான் பிரதேச செயலகத்தின் சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்போது விழிப்புணர்வு பேரணியில் வீதி நாடகமொன்றையும் நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் போதைப் பொருள் பாவனை மற்றும் உடல், உள ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து வகையான கெடுதல்களையும் விட்டொழிக்கும் விழிப்புணர்வை வழங்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொள்ள வாருங்களெனவும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg