Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக ஆளுநர் நாளை தூத்துக்குடி விஜயம்!

In இந்தியா
Updated: 08:19 GMT, May 28, 2018 | Published: 08:18 GMT, May 28, 2018 |
0 Comments
1110
This post was written by : Risha

ஸ்டெர்லைட் ஆலை சர்ச்சையினால் கலவர பூமியாக மாறிய தூத்துக்குடிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்வுள்ளார்.

இதன்போது, துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த விஜயத்தின்போது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்பன குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களை தூத்துக்குடி முதல்வர் இன்னும் நேரில் சென்று பார்வையிடாத நிலையில், தமிழக துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இன்று சந்தித்திருந்த அதேவேளை, தமிழக ஆளுநர் நாளை விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg