Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக தமிழரே ஒன்றுகூடு உன் இனம் அழிக்கப்படுகின்றது! – யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்

In இலங்கை
Updated: 09:15 GMT, May 28, 2018 | Published: 09:15 GMT, May 28, 2018 |
0 Comments
1410
This post was written by : Jeyachandran Vithushan

இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு கோரி போராட்டம் நடத்திவரும் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இன்று (திங்கட்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.

இன்று நண்பகல் ஆரம்பித்த இந்த போராட்டத்தில், ‘உலக தமிழரே ஒன்று கூடு உன் இனம் அழிக்கப்படுகின்றது’, ‘ஸ்ரெட்லைட் ஆலையினை மூடு’ என பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு தமிழீழ புரட்சி பாடல்களையும் ஒலிக்கவிட்டு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் முன்னெடுக்கப்பட்டு வந்த அமைதிப் போராட்டமானது கடந்த 22ஆம் திகதி 100 நாட்களை எட்டியது. அன்றைய தினம் ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியேபோது ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, தூத்துக்குடி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  13 பேர் உயிரிழந்தனர். 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலவரத்தை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவுகளும் நேற்று மீள பெறப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் மீது அத்துமீறி பொலிஸார் தாக்குதல் நடத்திய காணொளிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg