Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி

In இலங்கை
Updated: 09:56 GMT, Jun 3, 2018 | Published: 09:56 GMT, Jun 3, 2018 |
0 Comments
1114
This post was written by : Jeyachandran Vithushan

இலங்கை முதலீட்டு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுகளில் இந்த வருட முதல் நான்கு மாத காலப்பகுதியில் 1.38 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு திட்டங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை தவிர, மேலும் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த நிலையில், இந்த வருட இறுதிக்குள் மொத்தமாக 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர முடியும் என அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கடந்த ஆண்டு பூகோள ரீதியாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த போதிலும், சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் சீன நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டில், சிங்கப்பூர் 58 பில்லியன், ஹொங்கொங் 85 பில்லியன் மற்றும் சீனா 144 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையில் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg