Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பு!

In இலங்கை
Updated: 11:25 GMT, Jun 6, 2018 | Published: 11:25 GMT, Jun 6, 2018 |
0 Comments
1104
This post was written by : Litharsan

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனை பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

வவுனியா, ஈரப்பெரிய குளம் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சரான க.சர்வேஸ்வரன் இலங்கை தேசியக் கொடியை ஏற்றாமை தொடர்பாவே, விசாரணை செய்வதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விசாரணை எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்புப்பிரின் தலைமையகத்தில் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கான அழைப்பாணையை பயங்கரவாத தடுப்புப்பிரிவின் யாழ். பிராந்திய அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் நேரில் கையளித்துள்ளனர்.

முன்னதாக 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த போதும், அன்று இவரால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாத நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg