Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஸாவில் இஸ்ரேல் இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 04:42 GMT, Jun 9, 2018 | Published: 04:42 GMT, Jun 9, 2018 |
0 Comments
1102
This post was written by : Johnson paiva

காசா எல்லையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தினையடுத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா எல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான பலஸ்தீன போராட்டக்காரர்கள் தடுப்புவேலியை வெட்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதனையடுத்து    இந்த துப்பாக்கிச் சூடு நடத்தபட்டுள்ளது.

குறித்த இந்த சம்பவத்தில் இஸ்ரேல் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு கைகுண்டுகளையும் பயன்படுத்தியமையினால் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், அங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவிவருகின்றது. குறிப்பாக, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg