Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லியில் புழுதிப் புயல்: 18 விமானங்கள் திருப்பியனுப்பப்பட்டன

In இந்தியா
Updated: 15:23 GMT, Jun 9, 2018 | Published: 15:00 GMT, Jun 9, 2018 |
0 Comments
1052
This post was written by : Litharsan

டெல்லியில் பல்வேறு பகுதிகளில் புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 18 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லி மற்றும் சாத்தரபூர், அக்பர் சாலை, துவாரகா, ஆர்.கே.புரம் உள்ளிட்ட இடங்களில் புழுதிப்புயல் வீசியுள்ளது.

மேலும் புழுதிப்புயலால் வாகனப் போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு டெல்லியில் திடீர் வானிலை மாற்றத்தால் மாலை 5.30 மணிக்கே இருள் சூழ்ந்ததுள்ளது.

மிக பலத்த காற்று வீசுவதால் வானிலை மையத்தை தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வீடுகளில் மின்சார இணைப்புகளை துண்டிக்குமாறும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் மின்சாதனங்கள் மற்றும் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg