Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரற்ற காலநிலையால் 24 மணித்தியாலங்களில் 26 பேர் உயிரிழப்பு!

In இந்தியா
Updated: 16:32 GMT, Jun 9, 2018 | Published: 16:32 GMT, Jun 9, 2018 |
0 Comments
1141
This post was written by : Litharsan

உத்தரபிரதேசம் மாநிலத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் நேற்றிரவு முதல் வீசிய கடும் புழுதிப் புயல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால், சில மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது.

ஜாவ்ன்பூர் மற்றும் சுல்தான்பூர் மாவட்டங்களில் தலா 5 பேரும், உன்னாவ் மாவட்டத்தில் 4 பேரும், சன்டவுலி மற்றும் பஹ்ராய்ச் மாவட்டங்களில் தலா 3 பேரும், ரேபரேலி மாவட்டத்தில் இருவரும், மிர்சாபூர், சிதாபூர், அமேதி மற்றும் பிரதாப்கர் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இயற்கை அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களிற்கு வழங்கப்படும் நிதியுதவியையும் உடனடியாக வழங்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)