Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாதத்தினை ஒழிக்க ஆப்கானிஸ்தானிற்கு ஒத்துழைப்புத் தேவை: மோடி

In இந்தியா
Updated: 06:00 GMT, Jun 10, 2018 | Published: 06:00 GMT, Jun 10, 2018 |
0 Comments
1046
This post was written by : Ravivarman

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்து பிராந்திய நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பமானது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாதத்தின் விளைவுக்கு ஆப்கானிஸ்தான் ஒரு துரதிர்ஷ்டவசமான உதாரணமாகத் திகழ்கின்றது.

அங்கு அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு ஜனாதிபதிஅஷ்ரப் ஞானி எடுத்து வரும் துணிச்சலான முடிவுக்கு பிராந்திய நாடுகள் மதிப்பளிக்க வேண்டும் என்பதுடன் அந்நாட்டிற்கான உதவிகளையும் வழங்க வேண்டும்.

அத்துடன், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளில் இருந்து வெறும் 6 சதவிகிதம் பேர் மட்டுமே இந்தியாவுக்கு சுற்றுலாவிற்காக வருகின்றனர். இதனை எளிதாக இரட்டிப்பாக மாற்றக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.

மேலும் ஷாங்காய் அமைப்பின் உணவு மற்றும் புத்த கலாசார மாநாட்டை நடத்த இந்தியா தயாராக உள்ளது. பிராந்திய நாடுகளுடன் இது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிராந்திய நாடுகளை ஒன்றாக இணைப்பது இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும் என்பதுடன், பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயற்பட வேணடிய தேவையும் காணப்படுகின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)