Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பசுமைவழிப் பாதை சுரங்கப் பாதையாகவே அமைக்கப்படும்: முதல்வர்

In இந்தியா
Updated: 11:32 GMT, Jun 11, 2018 | Published: 11:31 GMT, Jun 11, 2018 |
0 Comments
1050
This post was written by : Kemasiya

சென்னைக்கும் சேலம் மாவட்டத்திற்கும் இடையில் அமைக்கப்படும் பசுமைவழிப் பாதையானது, சுரங்க வழிப்பாதையாகவே அமைக்கப்படும் என்றும், இதனால் மரங்கள் பெரிதாக வெட்டப்படாதென்றும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிப்பதை தொடர்பில், தி.மு.க.வினர் எழுப்பிய கேள்விக்கே முதல்வர் மேற்படி தெரிவித்துள்ளார்.

சென்னைக்கும், சேலம் மாவட்டத்துக்கும் இடையே பசுமைவழிச் சாலை அமைக்க இருப்பதாக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அப்பகுதி மக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சட்டமன்றத்தில் இதுகுறித்து பேசிய தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின், சென்னை சேலம் இடையேயான பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்காக 8 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதாகவும், இதனால் 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

எத்தனையோ சாலை பணிகள் நிலுவையிலிருக்க, பசுமை சாலைக்கு மட்டும் அ.தி.மு.க அரசு அதிக அளவில் முக்கியத்துவம் அளிப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், பசுமை சாலை அமைப்பது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்ட பின்பு அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சி தலைவரின் இந்த கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் சென்னை இடையேயான பசுமைவழிச் சாலைத் திட்டம் மத்திய அரசிடம் இருந்து போராடி பெற்ற திட்டம் என்றும், கடும் போராட்டத்துக்கு பிறகு பெறப்பட்ட திட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், மத்திய அரசு இந்த திட்டத்துக்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சாலை அமைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவ்வளவு பெரிய நிதி மாநில அரசிடம் இல்லை என்பதால் மத்திய அரசிடமும், உலக வங்கியிடம் இருந்தும் அந்த நிதியை பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)