Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சேலம் பசுமை வழிச்சாலை மக்கள் பயன்பாட்டிற்காகவே: முதலமைச்சர்

In இந்தியா
Updated: 05:14 GMT, Jun 12, 2018 | Published: 05:14 GMT, Jun 12, 2018 |
0 Comments
1044
This post was written by : Elakkiya

சென்னை சேலம் பசுமை வழிச்சாலை மக்கள் பயன்பாட்டிற்காகவே அமைக்கப்படுவதாக, தமிழக சட்டசபையில் முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன், பசுமை வழிச்சாலைக் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் சேலம் பசுமை வழிச்சாலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த திட்டத்தினால் 2 ஆயிரம் ஏக்கர் விளைச்சல் நிலங்கள் பாதிக்கப்படும் எனக் கூறிய ஸ்டாலின், மக்களும் விவசாயிகளும் போராட்டம் நடத்துவதையும் சுட்டிக்காட்டினார்.

எனவே மீண்டும் தூத்துக்குடி போன்ற ஒரு சம்பவம் நடக்க இடம்கொடுக்காது மக்கள் கருத்துக்களை கேட்டு அதன்படி செயற்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

இதற்கு பதில் வழங்கிய தமிழக முதல்வர் பழனிச்சாமி, இத்திட்டத்தை மத்திய அரசிடமிருந்து போராடிப் பெற்றுள்ளதாகவும், சாலை அமைப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.

இத்திட்டத்தில் 41 ஹெக்டேயர் வனப்பரப்பு மாத்திரமே பயன்படுத்தப்படும் என்றும் திட்டம் நிறைவேறினால், சேலம்-சென்னை இடையிலான பயண நேரம் குறையும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சேலம் பசுமை வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் 1900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 400 ஹெக்டேயர் அரசு நிலம் என்றும் திட்டத்தின்போது வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக 3 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனவே எதிர்கட்சிகள் எதிர்ப்புக்களை கைவிட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)